
தமிழகத்தில் மீண்டும் ஓபிஎஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்வார் என்றும், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அவர் கோட்டையில் கொடியேற்றுவார் என நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் தடாலடியாக பேசினர்.
சேலம் கோட்டை மைதானத்தில், ஓபிஎஸ் அணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அந்த அணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர்.
அப்போது பேசிய நாமக்கல் தொகுதி எம்.பி. பி.ஆர் சுந்தரம், துணை சபாநாயகர் தம்பிதுரை, தனது இஷ்டம்போல பேசுகிறார் என குறிப்பிட்டார். இரு அணிகளும் இணைய வேண்டும் என எடப்பாடி அணியினர், தொடர்ந்து நாடகமாடி வருவதாக குற்றம்சாட்டினார்.
விரைவிலேயே சபாநாயகர் தம்பி துரையின் துணை சபாநாயகர் பதவி பறிக்கப்படும் என்று தெரிவித்த சுந்தரம், இனை அவர் வெறும் தம்பிதுரைதான் என கிண்டல் செய்தார்.
ஓபிஎஸ் விரைவிலேயே மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாகவும், வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கோட்டையில் ஓபிஎஸ் கொடியேற்றுவார் என்றும் சுந்தரம் அதிரடியாக தெரிவித்தார்.