ஈரோடு மேம்பாலத்திற்கு ஜெயலலிதா பெயர்...! ஒன்றரை வருடமாக மூடி வைத்திருப்பது ஏன்..? ஓ.பி.எஸ் ஆவேசம்..

By Ajmal KhanFirst Published Aug 1, 2022, 11:00 AM IST
Highlights

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் ஈரோட்டில் அமைந்துள்ள மேம்பாலத்தின் பெயர்ப் பலகையை சீர்செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா பெயரை மூடிய தேர்தல் ஆணையம்

ஈரோட்டில் புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா அம்மா மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டு, பெயர்ப் பவகைகளும் அங்கு பொருத்தப்பட்டது. தற்போது பெயர் பலகை மூடி வைக்கப்பட்டுள்ளதை திறக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கல்வி, சுகாதாரம் உட்பட அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று தமிழக மக்களின் மனங்களில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். தன்னுடைய தன்னலமற்ற சேவையினால், அர்ப்பணிப்பு உணர்வினால், 'எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்ற குறிக்கோளை எய்தும் வண்ணம் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு அளித்த மாண்புமிகு அம்மா அவர்களின் பெயரில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டதோடு, பல்வேறு இடங்களுக்கு மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.

“எல்லாமே கட்டுக்கதை..எதுவுமே செல்லாது” பற்ற வைத்த பண்ருட்டி ராமசந்திரன்.. சசிகலா ரிட்டர்ன்ஸ் !

பெயர் பலகையை திறக்காத தமிழக அரசு

இந்த வரிசையில், ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரனார் சாலை - EVN சாலை பெருந்துறை சாலை சந்திப்புகளை இணைக்கும் வண்ணம், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் ஒரு புதிய மேம்பாலம் கட்டப்பட்டு, அந்தப் பாலத்திற்கு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா அம்மா மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டு, பெயர்ப் பலகைகளும் அங்கு பொருத்தப்பட்டதாக கூறியுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க, சென்ற ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களையும் மறைக்கும் வகையில் மாவட்ட ஆட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தபோது, அம்மா பெயரிலான மேற்படி பாலத்தின் பெயரும் மூடி மறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்தும், மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் மறைக்கப்பட்டுத் தான் இருக்கிறது.

டிடிவி அணியில் இணைந்தாரா ஓபிஎஸ் ஆதரவாளர்...? அதிர்ச்சி அடைந்த அதிமுக...சையது கான் கூறிய புதிய விளக்கம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மூடப்பட்டுள்ளதா?

பொதுவாக, தேர்தல் முடிவடைந்ததும், இவ்வாறு மறைக்கப்பட்ட பெயர்களை சரிசெய்யும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுப்பது வழக்கம். ஆனால், இந்த வழக்கமான நடைமுறை மேற்படி மேம்பால விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. ஒருவேளை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறைக்கப்பட்ட மேம்பாலத்தின் பெயர் சரி செய்யப்படவில்லையோ என்ற எண்ணம் அனைவர் மனதிலும் மேலோங்கி நிற்கிறது. மேற்படி மேம்பாலத்தில் மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர். பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு நிச்சயம் உண்டு. எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, மேற்படி மேம்பாலத்தில் மட்டுமல்லாமல், எங்கெல்லாம் பெயர்கள் தேர்தலுக்காக மறைக்கப்பட்டதோ, அவற்றையெல்லாம் சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுகவிற்கு தலைமை ஏற்க ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு தகுதி இல்லை..! அப்போ...யார் அந்த புதிய தலைமை..?கே.சி.பழனிசாமி அதிரடி

 

click me!