சென்னை பெரம்பூரில் வீட்டில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூரில் வீட்டில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவிக நகரில் உள்ள குமரன் நகர் காலனியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மகன் ஷியாம்(27. இவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு திருணமாகி 6 மாதங்களே ஆவதால் ஆடி மாதம் என்பதால் மனைவி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று தனது அறையில் ஷியாம் தூங்க சென்றுள்ளார். அப்போது, ஏசி செயல்பட்டதால் அறை உள்பக்கமாக பூட்டிப்பட்டிருந்தது. இரவு நேரத்தில் திடீரென வீடு முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டதால் அலறியடித்துக் கொண்டு தந்தை பிரபாகர் எழுந்தார்.
இதையும் படிங்க;- மக்களே உஷார்.. யூபிஎஸ் பேட்டரி வெடித்து விபத்து.. 3 பேர் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்..!
அப்போது, ஷியாம் அறையில் புகை வந்ததை கண்டு தந்தை அதிர்ச்சியடைந்தார். உடனே போலீசார் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அறையின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது ஷியாம் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- 10ம் வகுப்பு பையனை இழுத்துக்கொண்டு ஓடிய 35 வயது ஆண்டி.. ஒரு வழியாக 6 நாட்களுக்கு பிறகு கைது..!
இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த அறையில் இயங்கிக் கொண்டிருந்த ஏ.சி.வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது கணவர் இறந்த செய்தியை அறிந்த மனைவி நெஞ்சில் அடித்துக் கொண்டு என்னை விட்டுவிட்டு போயிட்டியே என்று கதறி அழுத சம்பவம் காண்போர் கண்களில் கண்ணீர் வரவழைத்தது.