பராமரிப்புப் பணி காரணமாக சென்னையின் முக்கிய இடங்களான மயிலாப்பூர், தாம்பரம், தி நகர், அம்பத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்றும், இந்த பணிகள் விரைவாக முடிவடைந்தால் முன்னதாக மின் தடை நீக்கப்படும் என்றும் மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க;- மின்சார மீட்டருக்கு ரூ.350 வாடகையா? தமிழக அரசின் புதிய அறிவிப்பால் அதிர்ச்சியில் மக்கள்- அன்புமணி கண்டனம்
மின்தடை ஏற்படும் இடங்கள்
மயிலாப்பூர் பகுதி: லஸ் நாட்டு வீராட்சி தெரு, கல்லுக்காரன் தெரு, பரிபூரண விநாயகர் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம் பகுதி: கடப்பேரி நியூ காலனி, நேரு நகர், அம்பாள் நகர், சங்கர்லால் ஜெயின் தெரு, மகாதேவன் தெரு, நல்லப்பா தெரு மெப்ஸ் ஜோனில் உள்ள அனைத்து பகுதிகளும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தி.நகர் பகுதி: மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு ஒரு பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
அம்பத்தூர் பகுதி: அன்னை நகர் டி.வி.எஸ் நகர், லேக்வியூ கார்டன், காவியா நகர், சீனிவாசபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர் பகுதி: கொளத்தூர் பூம்புகார் நகர், சாய் நகர், தென்பழனி நகர், டீச்சர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்
இதையும் படிங்க;- டார்ச்சர் தாங்க முடியல.. என்னோட சாவுக்கு மாமியார்தான் காரணம்.. 5 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.!