
ஜெயலலிதா சமாதியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மவுன அஞ்சலி செலுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 15 நிமிடத்திற்கு மேலாக மவுன அஞ்சலி செலுத்தி வருகிறார். தமிழகத்தில் அரசியல் குழப்பம் நிகழ்ந்து வரும் இச்சூழ்நிலையில் பன்னீர்செல்வம் திடீரென இரவு நேரத்தில் ஜெ. சமாதியில் அஞ்சலி செலுத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற எதிபார்ப்பு தமிழகத்தில் வெகுவாக எழுத்துள்ளது. தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் ஆச்சரியத்தையும் கேள்வியையும் தமிழக மக்களிடையே ஏற்படுத்துகிறது.