தமிழகம் வறட்சி மாநிலம் என அறிவித்தார் ஓபிஎஸ் - நில வரி முழுவதும் தள்ளுபடி

Asianet News Tamil  
Published : Jan 10, 2017, 03:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
தமிழகம் வறட்சி மாநிலம் என அறிவித்தார் ஓபிஎஸ் - நில வரி முழுவதும் தள்ளுபடி

சுருக்கம்

தமிழகம் முழுவதும் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படுவதாக முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை விட்டுள்ளார். 

வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதால் தொடநர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமைச்சர்கள் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு வருமாறு:

இதனால்  தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும், விவசாயிகள் நிலவரி தள்ளுபடி செய்யப்படும் வறட்சி நிவாரண கோரிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பகுதியாக அறிவிக்கப்படும், 33 சதவிகிதத்துக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகடன் மத்திய கால கடனாகமாற்றியமைக்கப்படும்

வறட்சியில் இருந்து மக்களை காக்க பெரும் நிதி செலவிடப்படும். நீண்டகால பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7237 ரூபாய் வழங்கப்படும். ஊரக வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக மாற்றியமைக்கப்படும். 80% மகசூல் இழப்பு ஏற்பட்டால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20000 பயிர்காப்பீடு.

ஏரிகள் , குளங்கள் , வாய்க்கால்கள் தூர் வார 3400 கோடி ரூபாய் ஒதுக்கீடு. நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு 5425 வழங்கப்படும். 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த திட்டம். இவ்வாறு முதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இன்று ரவுண்ட் கட்டி அடிக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் குளு குளு அப்டேட்!
திருநெல்வேலி இன்று முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு.! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க..!