ராம் மோகன் ராவ் என்ன எங்களுக்கு எதிரியா ? - வெங்கயா நாயுடு ஆவேசம்

Asianet News Tamil  
Published : Jan 10, 2017, 02:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
ராம் மோகன் ராவ் என்ன எங்களுக்கு எதிரியா ? - வெங்கயா நாயுடு ஆவேசம்

சுருக்கம்

ராம்மோகன் ராவ் தான் பழி வாங்கப்படுவதாக கூறியுள்ளது பற்றிய கேள்விக்கு பதிலளித்த வெங்கய்யா நாயுடு ராம் மோகன் ராவ் என்ன எங்களுக்கு எதிரியா , அல்லது பாஜகவுக்கு எதிரியா? அவர் இப்படி பேசுவதை தவிர்க்க வேண்டும். அவர் ஒரு அதிகாரி , இந்திய அரசுக்கு பணியாற்றும் கடமை உள்ளவர்

அவரை போல எண்ணற்ற தமிழக அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி இந்திய அளவிலும் இன்றும் பணியாற்றி வருகின்றனர். பணியாற்றி ஓய்வும் பெற்றுள்ளனர். பொறுப்பான அதிகாரியாக இவ்வாறு பேசுவதை ராம் மோகன் ராவ் தவிர்த்திருக்க வேண்டும். அவரது பேச்சை பல மூத்த அதிகாரிகள் , ஓய்வு பெற்ற அதிகாரிகள் நிராகரித்திருக்கிறார்கள்.

மத்திய அரசு யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கவில்லை எனபதையும் தெரிவித்து கொள்கிறேன் , இவ்வாறு அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

மருமகளின் தலையை தனியாக துண்டித்த மாமியார்.. நந்தினி மீது எதுக்கு இவ்வளவு கோபம்.! பரபரப்பு தகவல்!
4 மாதங்களாக வலியால் துடித்த 14 வயது சிறுவன்.! விடாத இரண்டு காமக்கொடூரன்கள்.! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!