மாட்டு சிறுநீர் குடிந்தால் காய்ச்சல் சரியாகும்.! சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேச்சு- எழுந்தது கண்டனம்

By Ajmal Khan  |  First Published Jan 19, 2025, 7:47 AM IST

சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் எனக் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு மாணவர் மன்றம் இக்கருத்து அறிவியலுக்குப் புறம்பானது எனக் கண்டித்துள்ளது. 


கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும்

மாட்டு பொங்கலையொட்டி சென்னையில் உள்ள கோசாலையில் நடைபெற்ற நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் உடலில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் அழிக்கும் சக்தி மாட்டு கோமியத்தில் உள்ளது எனவே கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் அஜீரணக் கோளாறு சரியாகும் என தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் ஐஐடி இயக்குனரின் சர்ச்சை கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

Tap to resize

Latest Videos

ஐஐடி இயக்குனருக்கு எதிர்ப்பு

சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் 15.01.25 அன்று மாட்டுப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சென்னை 8.8.14 இயக்குனரான திரு.காமகோடி, கோமியம் (மாட்டின் சிறுநீர்) குடித்தால் ஜூரம் சரியாகுமென அறிவியலுக்கு எதிரான, ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தை பேசியிருக்கிறார். அறிவியல்படி கோமியம் (மாட்டின் சிறுநீர்) என்பது மாட்டின் கழிவு. மேலும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் மாடாக இருந்தால் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும். 

ஆதாரத்தை வெளியிட வேண்டும்

இதை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அறிவியலை ஊக்குவிக்கவேண்டிய இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் அறிவியலுக்கு எதிராக பேசியிருப்பதை தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டிக்கிறது.

மேலும் தன் பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் தான் பேசியது தன்னுடைய சொந்த கருத்து என்றும், அறிவியல்படி தவறு என்றும் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!