எங்கள பழி வாங்குறத விட்டுட்டு! சென்னையில் ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தை பாருங்க! அண்ணாமலை!

By vinoth kumar  |  First Published Jan 18, 2025, 6:38 PM IST

தாம்பரத்தில் ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலரிடமும் செயின் பறிக்கப்பட்டது. 


திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். 

சென்னை தாம்பரம் ரயில்வே மைதானம் அருகே ஈஸ்வரி (56) என்பவர் தனது குடும்பத்துடன் தனியார் நிகழ்ச்சியை பார்க்க சென்றிருந்தார். நிகழ்ச்சியை பார்த்த பிறகு ஈஸ்வரி வெளியே வந்தார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க தாலி சங்கிலியை மர்ம நபர் பறிக்க முயற்சித்தனர். சுதாரித்துக் கொண்ட ஈஸ்வரி தாலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இருப்பினும் ஐந்து சவரன் சங்கிலியை அறுத்துக் கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களுக்கு முக்கிய செய்தி! இன்றே கடைசி நாள்!

அதேபோல் தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள தேவராஜா தெருவை சேர்ந்தவர் இந்திரா. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் வீட்டின் கேட்டை திறக்க முயன்ற போது அவரின் கழுத்தில் இருந்த ஐந்தரை சவரன் தாலிச் சங்கிலியை மர்ம நபர்கள் அறுத்து சென்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து 8 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் திமுக அரசு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் பாஜக தொண்டர்களைப் பின்தொடர்வதையே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியதன் விளைவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில்,  ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

குறிப்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர், சீருடையில் இருக்கும்போதே அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர்.  திமுக அரசு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் பாஜக தொண்டர்களைப் பின்தொடர்வதையே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியதன் விளைவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண் காவலரிடமே செயின் பறிப்புச் சம்பவம் நடக்கும் அளவுக்கு, தமிழக மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. 

இதையும் படிங்க: சென்னை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி! தப்பி தவறி கூட இந்த 4 நாட்களுக்கு அந்த பக்கம் போயிடாதீங்க!

சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, சென்னை காவல் ஆணையர்… pic.twitter.com/FRvRrME25l

— K.Annamalai (@annamalai_k)

திமுக அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக விரோதிகளுக்கு எதிராக, காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். காவல்துறையினரும், திமுகவின் அதிகார துஷ்பிரயோகங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் முதற்கடமையான சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார். 

click me!