எங்கு பார்த்தாலும் மரண ஓலை.. நொடிக்கு நொடி உயரும் பலி.. கதறும் கள்ளக்குறிச்சி.. விரையும் எடப்பாடி பழனிசாமி!

Published : Jun 20, 2024, 09:30 AM ISTUpdated : Jun 20, 2024, 09:41 AM IST
எங்கு பார்த்தாலும் மரண ஓலை.. நொடிக்கு நொடி உயரும் பலி.. கதறும் கள்ளக்குறிச்சி.. விரையும் எடப்பாடி பழனிசாமி!

சுருக்கம்

Kallakurichi illicit liquor Death : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. மேலும் 40க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. மேலும் 40க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தியதால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  ஆளும் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் துணையோடு கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை பல நாட்களாக நடந்து வந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்திக்க கள்ளக்குறிச்சி விரைகிறேன் என  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதையும் படிங்க: Kallakurichi: கள்ளக்குறிச்சியில் இவ்வளவு பேர் உயிரிழக்க காரணம் என்ன? அமைச்சர் எ.வ.வேலு பகீர் தகவல்.!

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அதிமுக சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன்.

ஆனால், இச்சூழலில், இந்த விடியா திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது. 

இதையும் படிங்க: TVK Vijay : கள்ளக்குறிச்சி சம்பவம் அரசின் அலட்சியத்தை காட்டுகிறது - திமுகவை நேரடியாக அட்டாக் செய்த விஜய்

மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன் என தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!