ஒபிஎஸின் கடிதம் கிடைக்கவில்லை! பேங்க் ஆப் இந்தியா போட்ட வெடிகுண்டு…

 
Published : Feb 09, 2017, 01:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
ஒபிஎஸின் கடிதம் கிடைக்கவில்லை! பேங்க் ஆப் இந்தியா போட்ட வெடிகுண்டு…

சுருக்கம்

இத்தனை நாள்களாக சசிகலாவுக்கு எதிராக மக்கள் குரல் கொடுத்தனர். அது தெரிந்தும் தெரியாதது போல இருந்தார் ஒபிஎஸ். தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, தான் கட்டாயத்தினால் தான் அவ்வாறு செய்தேன். சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார் என்று ஜெ.வின் சமாதி முன்பு பகிரங்கமாக தெரிவித்தார்.

அப்போதுதான், மக்களோடு சேர்ந்து சசிகலாவை முழுமையாக எதிர்க்க களத்தில் குதித்தார் ஒபிஎஸ். இவருக்கு ஆதரவு தெரிவித்தது முதலில் மக்கள் தான். பின்னர், இன்னாள் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என ஆதரவுத் தெரிவித்து இவருடன் இணைந்தனர்.

சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டார் என்ற காரணத்தினால், அதிமுகவின் பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார் ஒபிஎஸ்.

ஆனால், தன்னை நியமித்தது ஜெயலலிதா தான். அதனால், என்னை நீக்கும் உரிமை உங்களுக்கு கிடையாது என்று ஒரே போடாக போட்டார்.

அதோடு நிற்கவில்லை ஒபிஎஸ். அதிமுக கணக்கு வைத்திருக்கும் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு கடிதம் ஒன்றை எழுதினா. அதில், “இப்போதும் நான் தான் அதிமுகவின் பொருளாளர். என் அனுமதி இல்லாமால் எந்த பண பரிவர்த்தனையும் நடத்தக் கூடாது. அதிமுகவின் வங்கிக் கணக்கை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று எழுதி அனுப்பினார்.

இதனால், சசிகலா தரப்பு அதிமுகவினர் சற்றே ஆட்டம் கண்டனர்.

தற்போது, இதுகுறித்து பேங்க் ஆப் இந்தியா வெடிகுண்டு ஒன்றை போட்டுள்ளது. “அதிமுகவின் வங்கி கணக்கை நிறுத்திவைக்க வேண்டும் என்று ஒபிஎஸ் எழுதிய கடிதம் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.

அந்தக் கடிதம் கிடைத்தவுடன் வங்கி கணக்கு உடனடியாக நிறுத்தி வைக்கிறோம்: என்று பேங்க் ஆப் இந்தியா முதன்மை மேலாளர் தெரிவித்துள்ளார்.

என்னது கடிதம் கிடைக்கவில்லையா? என்று ஒபிஎஸ் தரப்பு அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!