
கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் ஒரு வாரம் அறப்போராட்டம் நடத்தினர். கடைசி நேரத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதனால், காவல் துறை மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. மேலும், போலீசாரே வாகனங்களுக்கு தீ வைத்த வீடியோ காட்சிகள், வைரலாக பரவியது. ஆனால் அதுபோன்ற காட்சிகளை நான், பார்க்கவே இல்லை என கமிஷனர் ஜார்ஜ் கூறினார்.
இந்நிலையில், நேற்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அதன்பின்னர், அனைத்து எம்எல்ஏக்களையும் சொகுசு பஸ்கள் மூலம் புறநகர் பகுதியான கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தை, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, சென்னை மாநகர கமிஷனராக உள்ள ஜார்ஜ் மாற்றப்படுவதாகவும், புதிய கமிஷனராக சஞ்சய் அரோரா நியமிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இதற்கான உத்தரவு விரைவில், பிறப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.