
சேலத்தை தூண்டும் “ஒரே ஒரு போஸ்டர்”..! பெரும் பரபரப்பில் மக்கள்..!
கடந்த ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி, ரூ.323 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை, சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற விரைவு ரயிலில் எடுத்து செல்லப்பட்டது. அப்போது ரயில் பெட்டியில் ஓட்டை போட்டு ரூ.5.78 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை கொள்ளையனை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இதற்காக நான்கு தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடும் பணியை சிபிசிஐடி போலீசார் விரைவு படுத்தியுள்ளனர்
அதன் ஒரு முயற்சியாக, கொள்ளையர்கள் குறித்து துப்பு கொடுக்கும் எவரானும் அவருக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.
எங்கு தெரியுமா?
சேலத்தில் தான்....டெங்குவிற்கும் முதலிடம் ...
போலி மருத்துவருக்கும் முதலிடம் ..
தற்போது கொள்ளை விவகாரத்திலும் பெயர் போன சேலம் என ஒவ்வொன்றிற்கும் பிரபலமாகி வருகிறது
இந்த கொள்ளை சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பின், போலீசார் சேலம் முழுவதும் உள்ள பல முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டியதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது