
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை முன்பு “திருத்துறைப்பூண்டி பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவு மருத்துவர்களை நியமிக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக உறுப்பினர் சந்திரராமன், ஒன்றியச் செயலாளர் பாஸ்கர், நகரச் செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “கிராமங்கள் தோறும் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் மருந்துகளை தெளிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.