
நடிகர் கமல் ஹாசன் அண்மை காலமாக சமூகம் குறித்து பல்வேறு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்.
அவரின் கருத்துக்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்து கொண்டிருந்தாலும், ஒவ்வொரு விஷயம் குறித்தும் நடிகர் கமல் கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஜாக்டோ ஜியோ அமைப்பினர், பழைய பென்ஷன், ஊதிய உயர்வு உள்ளிட்டவை குறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். பின்னர், அவர்கள் சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை தெரிவித்துள்ளார். அதில், வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானா என்றும் இது அரசியல்வாதிகளுக்கு பொருந்தாதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குதிரைபேரத்தில் ஈடுபட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் எப்படி ஊதியம் கொடுக்கப்படுகிறது? ஆசிரியர்களை எச்சரித்ததைப்போலவே நீதிமன்றம், எம்.எல்.ஏ.க்களை எச்சரிக்க வேண்டும் என்றும் நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.