சென்னை முழுக்க இனி ஒரே டிக்கெட்...! ரெயில், பஸ்,மெட்ரோ எதுல போனாலும் ஓகே தான்...!

 
Published : Nov 25, 2017, 01:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
சென்னை  முழுக்க இனி  ஒரே டிக்கெட்...! ரெயில், பஸ்,மெட்ரோ எதுல போனாலும் ஓகே தான்...!

சுருக்கம்

one ticket plan is coming soon in chennai

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் மூலம், நகரில் போக்குவரத்தை மேம்படுத்தும்  நோக்கில்  சென்னை  சர்வதேச  மைய  அலுவலகத்தில்  கருத்தரங்கம் நடை பெற்றது

சென்னை மெட்ரோ ரெயில்

அண்ணாசாலையில், சைதாப்பேட்டை முதல் டி.எம்.எஸ். வரையிலான சுரங்கம் அமைக்கும் பணி மார்ச் மாதம் நிறைவடையும் தருவாயில்  உள்ளது. இதனை தொடர்ந்து நகரின்  பல  இடங்களுக்கு  செல்லும் தருவாயில் மெட்ரோ ரெயில் சேவை  தொடங்க உள்ளது  அதன்படி

மெட்ரோ ரெயில் 2-வது கட்ட திட்டப்பணிகள் மாதவரம்-சிறுசேரி, ஆயிரம்விளக்கு-கோயம்பேடு, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 107.55 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதற்கு மத்திய அரசு ஏற்கனவே   ஒப்புதல் வழங்கி உள்ளது

இந்த அனைத்து பணிகளும்,2025-ம் ஆண்டுக்குள் இந்த திட்டப்பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

மேலும், சென்னையில் மாநகர பஸ்கள், மின்சார ரெயில்கள், மெட்ரோ ரெயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிப்பதற்கு ஏற்றவகையில் தொழில்நுட்ப பணிகள் நடந்துவருவதாகவும் தெரிவிக்கப் பட்டு  உள்ளது. இந்த  திட்டம் விரைவில் அமலுக்கு  வர  உள்ளது 

இந்த அனைத்து தகவலையும் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்துள்ளார்

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மக்கள் அதிக  அளவில் பயன்பெறுவர் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.அதே சமயத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்