
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்வதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது
டிசம்பர் 10 ஆம் தேதி முதல் தரிசன டிக்கெட் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாகிறது என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
இந்த திட்டம் சோதனை முறையிலான திட்டம் என்பதால் வைகுண்டம் வழியாகவும் இனி பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள்
அதே போன்று இலவச அனுமதி மூலம் வருபவர்கள் இரண்டே மணி நேரத்தில் தரிசனம் செய்யும் நடைமுறையை செயல்படுத்த உள்ளது
மேலும், இந்த அனைத்து நடைமுறையும் பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து முழுமையாக கடைபிடிக்கப் படும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது
ஆனாலும் கூட, இதற்கிடையில் திருப்பதி செல்ல விருப்பம் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷியம் என்னவென்றால், டிசம்பர் 10 ஆம் தேதி முதல் தரிசனம் செய்வதற்கு ஆதார் கட்டாயம் என்பது தான்...
இனி வரும் நாட்களில் அவரவர் தன்னுடைய ஆதார் கார்ட் நகலை எப்போதுமே தன்னுடன் வைத்திருப்பது நல்லது. நாம் பயன்படுத்தும் மொபைல் எண் எப்படி நமக்கு மனப்பாடமாக தெரிகிறதோ அதே போன்று ஆதார் எண்ணையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது