
நாமக்கல்
சிறுபான்மையினர் நல மேம்பாட்டுக்கான கருத்துகளை தெரிவிக்க சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த மக்களின் பிரதிநிதிகளுக்கு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நாமக்கல்லில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் மருத்துவர் எம்.பிரகாஷ் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் வரும் 29-ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்.
சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையினத்து மக்கள் பிரதிநிதிகளையும் காலை 10.30 மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சந்திக்கின்றனர்.
அங்கு, சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துகளை கேட்டறியவும் உள்ளனர்.
இதில், சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த மக்களின் பிரதிநிதிகள் மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரை சந்தித்து குறைகளையும், அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டுக்கான கருத்துகளையும் தெரிவிக்கலாம் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.