மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி! 

Asianet News Tamil  
Published : Nov 27, 2017, 02:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி! 

சுருக்கம்

One of the Madurai Collector office is trying to fire!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் அவரது உறவினர் ராஜேந்திரன் என்பவரிடம் இருந்து இரண்டு பவுன் தங்கநகை பெற்றுள்ளார். அந்த நகை திருட்டு நகை என போலீசார் விசராணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அண்ணா நகர் போலீசார் அருள்ராஜிடம் விசாரணை நடத்தி 2 பவுன் நகையை மீட்டுள்ளனர். இதனிடையே, தொடர்ந்து போலீசார் அருள்ராஜை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அருள்ராஜிடம் இருந்து 18 பவுன் நகையை பெற்றுள்ளதாகவும், இதனால் மனம் உடைந்த அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொள்ள முயற்சி செய்தார்.

அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அருள்ராஜின் கையில் இருந்த மண்ணெனைய் கேணை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றி பாதுகாத்தனர். பின்னர் போலீசார் விசாரணைக்காக தல்லாகுளம் காவல் நிலையம் அழைத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த தற்கொலை முயற்சியால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! வடமாநில குற்றவாளிக்கு சரியான ஆப்பு வைத்த கோவை போலீஸ்
'குடி'மகன்களுக்கு ஜாக்பாட்.. புத்தாண்டு ஸ்பெஷல்.. டாஸ்மாக் சொன்ன ஹேப்பி நியூஸ்!