புதுசா இன்னொரு மேலடுக்கு சுழற்சி...! குடை,ரெயின் கோட் இருக்கா...?

 
Published : Nov 27, 2017, 01:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
புதுசா இன்னொரு மேலடுக்கு  சுழற்சி...! குடை,ரெயின் கோட் இருக்கா...?

சுருக்கம்

keep rain coat and umbrella with u

தென்மேற்கு காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுவிழந்து அரபிகடலில் உள்ளது.இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில்  மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் ஸ்டெல்லா தெரிவித்து உள்ளார்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், ராமேஸ்வாரத்தில் 14 செமீ,செம்பரம்பாக்கம் 12 செமீ,சென்னை விமான நிலையம் மற்றும்  சீர்காழி  10 செ மீ,காஞ்சிபுரம் 9 செமீ, நுங்கம்பாக்கம் 6 செமீ மழையும்  பதிவாகி உள்ளது

தற்போது புதியதாக உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுவை,காரைக்கால்,உள்மாவட்டங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கன மழையும்  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

மேலும் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை விட்டு விட்டு மழை பெய்யக்கூடும் என்றும், சில நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது  

வடகிழக்கு பருவ மழை தற்போது மீண்டும் தொடங்கி உள்ளதால்  அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு நல்ல மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!