
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், 12 மணிக்கு முன்னதாகவே டாஸ்மாக் கடையில் சரக்கு விற்ற ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள், மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளும், குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், பாரில் மறைமுகமாக விற்பனை செய்வதும், அவர்களை போலீசார் பிடிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமல், 12 மணிக்கு முன்னதாகவே கடையை திறந்து, குடிமகன்களுக்கு சரக்குளை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில், 12 மணிக்கு முன்னதாகவே மதுபானம் விற்பனை செய்யப்படுவதை செய்தி தொலைக்காட்சியில், கடந்த சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பானது.
இதை தொடர்ந்து போலீசார், மாறு வேடத்தில் சென்று, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை கண்காணித்தனர். அப்போது, பாரில் வைத்து டாஸ்மாக் ஊழியர்களே சரக்குளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக உள்ளே நுழைந்த போலீசார், டாஸ்மாக் ஊழியர்கள் பிரேம்குமார், குமார் உட்பட 4 பேரை செய்துள்ளனர்.
கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தால், டாஸ்மாக் ஊழியர்கள் கம்பி எண்ணுகிறார்கள் என அப்பகுதி மக்கள் கமாண்ட் அடிக்கின்றனர்.