ஹாப்பி நியூஸ்!! வரும் செப்.,8 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் கிடையாது.. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை ..?

By Thanalakshmi V  |  First Published Sep 1, 2022, 6:42 PM IST

சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது எனவும், அதற்கு பதிலாக செப்டம்பர் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் வரும் செப்.,8 ஆம் தேதி கோவை மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 



வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, ஆகஸ்ட் 30 ஆம் தேதி  தொடங்கி, செப்டம்பர் 8 ஆம் தேதி வரை, 10 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. இத்திருநாளையொட்டி, மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக, மலையாள மக்கள் தங்கள் இல்லங்களில் வண்ண பூக்கள், கோலங்களால் அலங்கரித்து மகிழ்வர். பள்ளி, கல்லூரிகளிலும் ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம்.

மேலும் படிக்க:அடுத்த 2 நாளைக்கு இந்த மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகுதாம்.. 122 வருஷத்துல இல்லாத மழை, ஒரு மாதத்தில்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் கேரளா மட்டுமின்றி எல்லை மாவட்டங்களான கோவை , கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மலையாள மக்களால ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டப்படும். கல்வி மற்றும் வேலை நிமித்தமாக தலைநகர் சென்னையில் குடியேறியுள்ள மலையாள மக்களால சென்னையிலும் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். \

இதனால் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி (வியாழக்கிழமை) சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது எனவும், அதற்கு பதிலாக செப்டம்பர் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் படிக்க:அலர்ட் !! சென்னையில் மழை தொடரும்.. இன்னும் சில மணி நேரத்தில் அடித்து ஊற்றப் போகும் மழை..

இந்நிலையில் வரும் செப்.,8 ஆம் தேதி கோவை மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!