அடுத்த 2 நாளைக்கு இந்த மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகுதாம்.. 122 வருஷத்துல இல்லாத மழை, ஒரு மாதத்தில்.

By Ezhilarasan Babu  |  First Published Sep 1, 2022, 5:15 PM IST

தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை ஆகஸ்ட் மாதத்தில் தமிழகம் மற்றும் புதுவையில்  இயல்பை விட 93 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை ஆகஸ்ட் மாதத்தில் தமிழகம் மற்றும் புதுவையில்  இயல்பை விட 93 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 122 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பதிவாகி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: ஆர்.பி உதயகுமாருக்கு பாடை கட்டுவேன் என்றதில், என்ன தப்பு..?? சீனுக்கு வந்த ஓபிஎஸ் 2வது மகன்..

தென்மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவையில் தீவிரமாக இருந்து வருகிறது, இரவு நேரங்களில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது, கடந்த ஒரு வார காலமாகவே மழை பரவலாக இருந்து வரும் நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பதிவாகி உள்ளது, அதில் எட்டு இடங்களில் கன மழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: சீமான், பெ. மணியரசன் BJPயின் கைக்கூலி.. பாஜகவுடன் இருந்தவன் உருப்பட்டது இல்ல.. சுப.வீரபாண்டியன்.

நாகப்பட்டினம் திருக்குவளையில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது, நாமக்கல், தருமபுரி, திருப்பூர், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 18  மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை 100 சதவீதம் அளவிற்கு பதிவாகியுள்ளது. 22 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பதிவாகியுள்ளது, குறிப்பாக 1906ஆம் ஆண்டு 112 சென்டிமீட்டர் மழையும், 1909ஆம் ஆண்டு 127 சென்டி மீட்ர் மழையும்,  2022ஆம் ஆண்டு 93 சென்டி மீட்டர் மழையும் பதிவானது, கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தென்மேற்கு பருவமழை 40 சென்டி மீட்டர் அளவிற்கும் இயல்பான மழை 21 சென்டி மீட்டர் அளவும் பதிவாகி உள்ளது.

இது இயல்பைவிட 88 சதவீதம் அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதே போல் வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து இரண்டு, மூன்று தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிதமான மழையும் பெய்யும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.  
 

click me!