சென்னையில் இருந்து 2 நாளில் இத்தனை லட்சம் பேர் வெளியூருக்கு பயணமா.? போக்குவரத்து துறை வெளியிட்ட முக்கிய தகவல்

By Ajmal Khan  |  First Published Jan 14, 2024, 8:29 AM IST

தமிழர்களின் முதன்மையான பண்டிகையான பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊரில், உறவினர்களோடு கொண்டாட பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் பொதுமக்கள் செல்ல தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் இரண்டு நாட்களில் 4 லட்சத்து 44 ஆயிரத்து 860 பயணிகள் சிறப்பு பேருந்து மூலம் பயணம் செய்துள்ளனர். 
 


பொங்கல் கொண்டாட்டம்- சிறப்பு பேருந்து

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊரில் உறவினர்களோடு கொண்டாட மக்கள் திட்டமிட்டு சென்னையில் இருந்து புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் சென்னையில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தநிலையில் பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது.

Latest Videos

இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையில், போக்குவரத்து துறையின் சார்பில், பொங்கல்  திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (13/01/2024)  நள்ளிரவு 24.00  மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,100 பேருந்துகளில் 2,100 பேருந்துகளும் 2,210 சிறப்புப் பேருந்துகளும் ஆக கடந்த 12/01/2024 முதல் 13/01/2024 இரவு 24.00 மணி வரை 7,670 பேருந்துகளில் 4,44,860 பயணிகள் பயணித்துள்ளனர். 

7 மணி நேரம் 11மணி நேரமாக அதிகரிப்பு

மேலும், இதுவரை 2,30,514 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். நேற்றைய ஒரு நாளில் மட்டும் 2210 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இது கடந்த மூன்று வருடங்களில் ஒரே நாளில் இயக்கப்பட்ட அதிகபட்ச சிறப்பு பேருந்துகளாகும். நேற்று சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்கள் இயக்கப்பட்டதால் பேருந்துகள் இயக்க நேரம் கூடுதல் ஆனது. சென்னை-திருச்சி சாதாரண நாட்களில்  7 மணி நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகள் 11 மணி நேரம் எடுத்துக் கொண்டதாலும் மேலும் பேருந்துகளை சென்னைக்கு அடுத்த நடைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. 

அதிகாலை 5 மணி வரை நீடித்த பேருந்து சேவை

இது தவிர திருச்சி பொன்மலை ரயில்வே மேம்பாலம் விரிசல் கண்டதால் பேருந்துகள் மாற்று வழி பாதையில் இயங்கியதும் காலதாமதத்திற்கு காரணமானது. இதனால் சென்னையிலிருந்து பயணிகளை தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்புவதில் சற்று காலதாமதம் ஆனது. நேற்று கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து பயணிகளை முழுவதுமாக தங்கள் ஊர்களுக்கு அனுப்ப இன்று காலை ஐந்து மணி வரை ஆனது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

போகி கெண்டாட்டத்தால் அதிகரித்த காற்று மாசு...விமான சேவை பாதிப்பு- சென்னையில் இவ்வளவு மாசு பதிவாகியிருக்கா.?

click me!