போகிப் பண்டிகை கொண்டாட்டம்.. சென்னையில் கடும் புகை மூட்டம்.. வாகன ஓட்டிகள் அவதி.. விமான சேவை பாதிப்பு!

By vinoth kumar  |  First Published Jan 14, 2024, 7:50 AM IST

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையாகும்.  


தை பொங்கலை வரவேற்கும் விதமாக தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையாகும்.  இந்நாளில் பழையன கழித்து புதியன புகவேண்டும் என்பதற்காக போகி பண்டிகை கொண்டாப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- Chennai Traffic Changes: காணும் பொங்கல்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

இதனையொட்டி போகி பண்டிகையான இன்று அதிகாலை உற்சாகமாக சிறுவர், சிறுமிகள் மேளம் அடித்து பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை மக்கள் தங்கள் வீட்டு வாசலில் தீயிட்டு கொளுத்து பண்டிகை கொண்டாடி வருகின்றனர். 

இதையும் படிங்க;- பொங்கல் பண்டிகை எதிரொலி.. விமான கட்டணத்தை தாறுமாக உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

இதனால், சென்னையில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பல பொருட்களை எரிப்பதால் எழுந்த புகையால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் புகை சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காலை 6 மணி நிலவரப்படி ஆலந்தூர் - 125, அரும்பாக்கம் - 200, எண்ணூர் - 217,  கொடுங்கையூர் - 154, மணலி - 277, பெருங்குடி - 272, ராயபுரம் - 199, வேளச்சேரி - 100 என உள்ளது.  புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 50 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

click me!