மதுரையை வஞ்சிக்கிறதா தமிழக அரசு? கிடப்பில் கிடக்கும் மெட்ரோ & இன்டர்நேஷனல் ஏர்போர்ட் பணிகள் - உண்மை என்ன?

By Ansgar RFirst Published Jan 13, 2024, 10:49 PM IST
Highlights

Madurai Metro : மதுரையில் மெட்ரோ ரயில் நிலைய பணிகள் மற்றும் சர்வதேச விமான நிலைய பணிகள் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கின்றது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மதுரை மெட்ரோ முதல் சர்வதேச விமானநிலையம் வரை 

தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் பெரு நகரங்களான கோவை மற்றும் திருச்சி போன்ற மாவட்டங்களுக்கு மட்டுமே வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும், தமிழக அரசு இந்த வளர்ச்சி திட்ட விஷயத்தில் தென் மாவட்டங்களை வஞ்சிப்பதாகவும் பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. 

Latest Videos

இந்த சூழ்நிலையில் மதுரை சர்வதேச விமான நிலைய பணிகளும், மெட்ரோ ரயில் திட்ட பணிகளும் கிடப்பில் இருப்பது அம்மாவட்ட மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். மதுரையை பொறுத்தவரை துயலாநகரம் என்று பெயர் பெற்ற ஒரு மாபெரும் நகரமாகும். ஆனால் தமிழக அரசு அங்கு அறிவித்த மதுரை மெட்ரோ ரயில் திட்டம், டைட்டில் பார்க் திட்டம் மற்றும் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையாக தரம் உயர்த்தும் திட்டம் உள்ளிட்டவை பல ஆண்டுகளாக கிடப்பில் கிடப்பதாக பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். 

கோவைய பலூனில் பார்க்க அரிய வாய்ப்பு; சர்வதேச பலூன் திருவிழாவில் குவியும் பார்வையாளர்கள்

சென்னை. கோவை, திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் இந்த மூன்று இடங்களில் உள்ள விமான நிலையங்களை பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு செல்ல நினைப்பவர்களுக்கு திருச்சி விமான நிலையம் ஒரு வரப்பிரசாதமாக இருந்துகொண்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி திருச்சியில் புதிய பன்னாட்டு முனையம் ஒன்றை திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தென் தமிழகத்தில் உள்ள சுமார் 14 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய மதுரை மாவட்ட விமான நிலையத்தை நான் பெரிய அளவில் நம்பி இருக்கின்றனர். 

அப்படி இல்லை என்றால் அவர்கள் திருச்சி அல்லது சென்னை விமான நிலையங்களை தான் பெரிய அளவில் நம்பி இருக்க வேண்டியுள்ளது. ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் பயணிகள் மதுரை விமான நிலையத்தில் பயணித்து வருகின்றனர், ஆனால் இன்றளவும் சர்வதேச விமான நிலையமாக அது மாற்றப்படாத காரணத்தினால் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விமான சேவைகள் அங்கு வழங்கப்பட்டு வருகிறது. 

சரி இதற்கு என்ன காரணம்?

அண்மையில் திருச்சி வந்த பிரதமர் மோடியிடம், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆகையால் இந்த திட்டங்கள் நிறைவேற்றாததற்கு மத்திய அரசை சிலர் காரணம் கூறி வந்தாலும், தமிழக மற்றும் மத்திய அரசுக்கு இடையே நிலவும் ஒரு மோதல் போக்கு தான் மதுரையின் இந்த வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுவதற்கு காரணமாக கூறப்படுகிறது. 

ஆனால், விரைவில் மதுரையில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்கப்படும் என்றும் மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும் என்றும் டைடல் பார்க் அதிக அளவில் உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை மீண்டும் அடாவடி! எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

click me!