தனது பிறந்தநாளையொட்டி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் குமரி ஆனந்தனை சந்தித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வாழ்த்து பெற்றார்.
தமிழக அரசியலில் குமரி ஆனந்தன்
இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்று அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருட்டிணன் - தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19-ஆம் நாளன்று பிறந்தவர், பெருந்தலைவர் காமராஜரின் சீடரான அவர், -காங்கிரசுப் பேரியக்கத்தின் மாநிலத் தலைவராகவும் இருந்துள்ளார். மக்கள் நலனுக்காக 17முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். குமரி அனந்தன் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும். ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
சிகிச்சையில் குமரிஆனந்தன்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரிஆனந்தன், இலக்கிய செல்வர் என அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார். தெலுங்கான மற்றும் புதுவை மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தந்தை தான் குமரி ஆனந்தன். தற்போது பாஜக சார்பாக தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இந்தநிலையில் தமிழிசை தனது பிறந்தாளையொட்டி தந்தை குமரி ஆனந்தனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
எனது பிறந்த நாளில் வேலூர் மாவட்டம் - குடியாத்தம் காக்கா தோப்பு அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எனது பாசமிகு தந்தை திரு.குமரி அனந்தன் அவர்களை நேரில் சந்தித்து அன்பான ஆசிர்வாதங்களையும், வாழ்த்துக்களையும் பெற்று மகிழ்ந்தோம்.... pic.twitter.com/QjJIfqXh1k
— Dr Tamilisai Soundararajan (மோடியின் குடும்பம்) (@DrTamilisai4BJP)
வாழ்த்து பெற்ற தமிழிசை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனது பிறந்த நாளில் வேலூர் மாவட்டம் - குடியாத்தம் காக்கா தோப்பு அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எனது பாசமிகு தந்தை திரு.குமரி அனந்தன் அவர்களை நேரில் சந்தித்து அன்பான ஆசிர்வாதங்களையும், வாழ்த்துக்களையும் பெற்று மகிழ்ந்தோம்