தீபாவளி பண்டிகையை கொண்டாட நேற்று ஒரே நாளில் மட்டும் சிறப்பு பேருந்துகள் மூலம் ஒரு லட்சத்து 36ஆயிரம் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தீபாவளி சிறப்பு பேருந்துகள்
தீபாவளி பண்டிகை வருகிற 12 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக சென்னையில் தங்கி பணியாற்றி வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்கேற்றார் போல் தமிழக அரசும் வருகிற திங்கட் கிழமை அதாவது தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவித்துள்ளது. இதனையடுத்து நேற்று வியாழக்கிழமை மாலையே லட்சக்கணக்கானோர் வெளியூருக்கு பயணம் செய்ய தொடங்கியுள்ளனர்.
சென்னையில் தாம்பரம் வழியாகவும், அம்பத்தூர் வழியாகவும் பேருந்து மற்றும் சொந்த காரிகளில் பயணத்தை தொடங்கியுள்ளனர். இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகளவு காணப்பட்டது. அதே நேரத்தில் பொதுமக்கள் வெளியூர் செல்லுவதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகளும், தெற்கு ரயில்வே சார்பாக ரயில்களும் இயக்கப்படுகிறது.
ஒரே நாளில் இத்தனை பேர் பயணமா.?
இந்தநிலையில் 2734 பேருந்துகள் மூலம் ஒரு லட்சத்து 36ஆயிரத்து 700 பேர் வெளியூருக்கு பயணம் செய்துள்ளதாகவும், அதே நேரத்தில் இன்றும் நாளையும் வெளியூர் செல்ல 2 லட்சத்து 23ஆயிரத்து 613 பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளதாகவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வீஷேச நாட்களில் சொந்த ஊர் சென்று குடும்பத்தினரோடு தங்கி விழாக்களில் கலந்து கொள்ள விருப்பப்படுவார்.
கடந்த ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விடுமுறைக்கு மட்டும் சுமார் 6 லட்சம் பேர் பேருந்து மூலம் பயணம் செய்திருந்தனர். எனவே தீபாவளி பண்டிகை காரணமாக இதை விட அதிகமானோர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்