ஆயுத பூஜையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை – காரைக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆயுத பூஜையை, வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை – காரைக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை செண்ட்ரலில் இருந்து சிறப்புக்கட்டண ரயில் எண்.06039 நாளை (22.10.2023) இரவு 11.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு காரைக்குடி சென்றடையும். மறுமார்க்கத்தில் வரும் 23-ம் தேதி இரவு 9.30 மணிக்கு சிறப்பு கட்டன ரயில் எண் 06040 காரைக்குடியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 9.00 மணிக்கு சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சென்னை செண்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதே போல் 06046 என்ற எண் கொண்ட, நாகர்கோயில் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், வரும் 24-ம் தேதி இரவு 7.35 மணிக்கு நாகர்கோயிலில் இருந்து புறப்பட்டு, அடுத்த காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
மறுமார்க்கத்தில் 06045 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11.30 மணிக்கு நாகர்கோயில் சென்றடையும்.
மிஸ்ஸானா மாட்டுவீங்க.. டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தால் அவ்ளோதான்.. ரயில்வே போட்ட புது பிளான்..
நாகர்கோயில் ரயில் நிலையத்தில் புறப்படும் இந்த ரயில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலைய நிறுத்தங்களில் நிறுத்தப்படும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களில் ஏசி 2-ம் வகுப்பு பெட்டி, ஏசி 3-ம் வகுப்பு பெட்டி, பொது 2-ம் வகுப்பு பெட்டி, ஸ்லீப்பர் பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.