போலி இன்சூரன்ஸ்; தாய் உயிரிழந்த நிலையில் இழப்பீடு கிடைக்காமல் பரிதவிக்கும் 2 குழந்தைகள்

By Velmurugan s  |  First Published Oct 20, 2023, 7:04 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் பெண் விபத்தில் உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் உரிய இன்சூரன்ஸ் இல்லாததால் தாயை இழந்த குழந்தைகள் இழப்பீடு தொகைக் கூட கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் மீது போலியாக இன்சூரன்ஸ் காப்பீடு வைத்துள்ளதால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்சூரன்ஸ் அதிகாரி அருண்குமார் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இன்சூரன்ஸ் அதிகாரி அருண், திருப்பூர் மாவட்டம் தெற்கு காவல் காவல் நிலையம் எல்லைகு உட்பட்ட பகுதியில் விபத்து நடைபெற்றது. 

விபத்தில் 33 வயது பெண் சாலையை கடக்கும் போது டாட்டா ஏஸ் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது தொடர்பாக இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் பரிசோதிக்கும் போது விபத்து ஏற்படுத்திய வாகனம் போலியாக இன்சூரன்ஸ் தயாரித்துள்ளது. ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் அந்த வாகனத்திற்கு எந்த விதமான இன்சூரன்சும் வழங்கப்படவில்லை. ஆனால் அந்த வாகனத்தில் ரிலையன்ஸ் இன்சூரன்ஸில் காப்பீடு போட்டதாக பதவுகள் உள்ளன.

Tap to resize

Latest Videos

அதிமுக பெண் தலைவரை நிகழ்ச்சி முழுவதும் நிற்கவைத்துவிட்டு பெண் உரிமை குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி

இதுபோல் போலியாக இன்சூரன்ஸ் தயாரிப்பதினால் விபத்து ஏற்பட்டால் உரிய நிவாரணம் வழங்க இயலாது எனவும் இதுபோல் போலியாக இன்சூரன்ஸ் தயாரிக்கும் நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கூறினார். விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அந்த குழந்தைகளுக்கு தற்போது எந்தவிதமான நிவாரணமும் அளிக்க முடியவில்லை. பொதுமக்கள் சரியான முகவரிகளிடம் இன்சூரன்ஸ் காப்பீடு போடுமாறு வலியுறுத்தினார். இது குறித்து விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநரிடம் கேட்கும்போது, அவரும் தான் ஏமாற்றப்பட்டுள்ளதே இப்போது தான் தெரியும் என்று கூறினார்.

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி சோதனையால் பரபரப்பு 

மோட்டார் வாகனம் சட்டப்படி உரிய ஆவணங்கள் இருந்தால் இழப்பீடு வழங்கப்படும். ஆனால் இவர்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் இழப்பீடு வழங்கப்படாத மாட்டாது என்று கூறினார்.

click me!