குழந்தைகள் கைவிட்டதால் கால்வாயில் குதித்து தம்பதி தற்கொலை? போலீசார் விசாரணை

Published : Oct 17, 2023, 09:43 AM IST
குழந்தைகள் கைவிட்டதால் கால்வாயில் குதித்து தம்பதி தற்கொலை? போலீசார் விசாரணை

சுருக்கம்

உடுமலை அடுத்த திருமூர்த்திமலை அருகே காண்டூர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி யார் என தளி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

உடுமலை அடுத்த திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரக்கூடிய காண்டூர் கால்வாயில் நேற்று முன்தினம் மாலை தம்பதியினர் குதித்து  தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்த தகவல் தளி போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்கள் உடல் தண்ணீரில் மிதந்து வரக்கூடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அணைப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது  அணைப்பகுதியில் கரை ஒதுங்கிய ஆணின் உடலை மீட்டனர். இந்த சூழலில் இன்று  காலையில் பெண் உடலும் கரை ஒதுங்கியது. இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. 

கவனக்குறைவாக இயக்கப்பட்ட பள்ளி வாகனம்? தாய் கண் முன்னே மகன் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பலி

உயிரிழந்தவர்கள் குறித்த புகைப்படத்துடன் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் அண்டை மாவட்டங்களுக்கு தளி காவல் துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர். இறந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் ? கடன் தொல்லையா அல்லது குழந்தைகள் கைவிட்டு விட்டனரா என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தம்பதியினர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளையடிப்பதற்காக கூடிய கூட்டு குடும்பம் தான் திமுக கூட்டணி - வேலூர் இப்ராஹிம் பேச்சு

PREV
click me!

Recommended Stories

தலை துண்டிக்கப்பட்டு காவல் ஆய்வாளர் படுகொ*ல: அதிமுக MLA தோட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்
ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை கீழே தள்ளிய கொடூரனுக்கு சாகும் வரை சிறை! நீதிமன்றம் தீர்ப்பு!