திருப்பூரில் விலை உயர்ந்த கேடிஎம் பைக்கை தாய் வாங்கித்தர மறுத்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சித்தம்பலம் பகுதியில் வசித்து வருபவர் சிவகாமி. இவரது கணவர் ராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். மகன் சௌந்தர்ராஜன் (வயது 19) அங்குள்ள மட்டை வண்டிக்கு வேலைக்கு சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக சௌந்தர்ராஜன் அவரது அம்மா மற்றும் அக்காவிடம் தொடர்ந்து விலை உயர்ந்த பைக்கான கே டி எம் பைக்கை வாங்கித் தர வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று வழக்கம்போல் விலை உயர்ந்த கே டி எம் பைக் வேண்டுமென்று வீட்டில் சண்டையிட்டு விட்டு வெளியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று மாலை பல்லடம் உடுமலை சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டு இருப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் பிரலப நகைக்கடை உரிமையாளரும், தொழிலதிபருமான சுரேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதையடுத்து அங்கு சென்ற பல்லடம் போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தூக்கில் தொங்கிய வாலிபர் சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பது தெரியவந்தது.
திருச்செந்தூர் அருகே காப்பகத்தில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு; போலீசார் விசாரணை
இளைஞர் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லடம் அருகே விலை உயர்ந்த பைக்கான கேடிஎம் பைக் வாங்கித் தராததால் மனம் உடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.