தீபாவளி நேரத்தில் தாம்பரம் வழியாக ஆம்னி பஸ்கள் செல்லாது - பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு

 
Published : Oct 17, 2016, 07:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
தீபாவளி நேரத்தில் தாம்பரம் வழியாக ஆம்னி பஸ்கள் செல்லாது - பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு

சுருக்கம்

தீப ஒளித் திருநாளை முன்னிட்டு நிர்ணயிக்க ப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த தனியார்  பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் பாண்டியன், தீப ஒளித் திருநாளை முன்னிட்டு வரும்  27 ஆம் தேதி முதல்  31 ஆம் தேதி வரை  600 சிறப்பு பேருந்துகள் உட்பட  1200 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும்  கோயம் பேட்டில் இருந்து பூந்த மல்லி வழியாகவும், வண்டலூர் வழியாகவும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும்,  தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வழியாக பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று அவர் கூறினார். கடந்த  13 ஆம் தேதி தலைமை செயலகத்தில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த  ஆலோசனை கூட்டத்தில் சங்கம் நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்  அதிகப் படியான கட்டணங்கள்  வசூலிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்  எச்சரித்துள்ளார். கோயம்பேட்டில் வரும்  27 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு புகார் மையங்கள் அமைக்கப்படும். மேலும் குழுக்கள்  அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்  என தெரிவித்தார்.  இடைத்தரகர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்  என கேட்டுக் கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!