தனியார் பேருந்து மோதி ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது..! அலறி அடித்து ஓடிய பயணிகள்- பரபரக்கும் வீடியோ

Published : Sep 22, 2023, 09:09 AM ISTUpdated : Sep 22, 2023, 09:34 AM IST
தனியார் பேருந்து மோதி ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது..! அலறி அடித்து ஓடிய பயணிகள்- பரபரக்கும் வீடியோ

சுருக்கம்

செம்பரம்பாக்கம் அருகே தனியார் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியலில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அவசர அவசரமாக பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டதால் உயிர் தப்பினர்.

பேருந்து மோதி விபத்து

சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று காலை 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிய இ பேருந்து ஒன்று, பெங்களூரை நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்து பூந்தமல்லி சாலையில் உள்ள பாப்பாசத்திரம் அருகே சென்ற போது பின் பக்கமாக வந்த தனியார் பேருந்து மோதியுள்ளது. அப்போது பேருந்து பின் பகுதி சேதமடைந்து தீப்பிடிக்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறி அடித்து ஓட தொடங்கினர். பேருந்தில் பின் பகுதியில் பேட்டரி மற்றும் என்ஜின் இருப்பதால் அதில் பற்றிய தீ பேருந்து முழுவதும் பரவ தொடங்கியது.

அலறி அடித்து ஓடிய பயணிகள்

இதனையடுத்து அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரியை மடக்கிய அப்பகுதி மக்கள், தீப்பிடித்த பேருந்தை அணைக்க முற்பட்டனர். அப்போது பேருந்தில் பட்டாசு வெடிப்பது போல் பலத்த சத்தத்தோடு வெடி விபத்து ஏற்பட்டு தீ பரவ தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அங்கிருந்து ஓட தொடங்கினர்.

 

இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். இருந்த போதும் தீயானது பேருந்து முழுவதும் பரவி பேருந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. இந்த தீவிபத்து காரணமாக செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தற்போது பேருந்தை அந்த பகுதியில் இருந்து அகற்றமு பணியானது நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்

ஷாக்கிங் நியூஸ்.. 2 குழந்தைகளுடன் பெண் காவலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. இதுதான் காரணமா?
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!