“இன்று நள்ளிரவு வரை கரண்ட் பில் கட்ட பழைய நோட்டுக்களை கொடுக்கலாம்” - மின் வாரியம் அறிவிப்பு

 
Published : Nov 12, 2016, 06:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
“இன்று நள்ளிரவு வரை கரண்ட் பில் கட்ட பழைய நோட்டுக்களை கொடுக்கலாம்” - மின் வாரியம் அறிவிப்பு

சுருக்கம்

500 ரூபாய், 1,000 ரூபாய் மூலம் தமிழகத்தில் இன்று இரவு வரை, மின் கட்டணம் செலுத்தலாம் என தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததையடுத்து,

மின்சார வாரியத்தில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என்றும்,  மின் கட்டணம் செலுத்த ஒரு வாரம் கால அவகாசம்  நீட்டிக்கப்படும் என தமிழ்நாடு மின் வாரியம் முதலில் அறிவித்திருந்தது.

தொடர்ந்து, குடிநீர் வரி, மின்சார கட்டணத்துக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படும் என நேற்று பொருளாதார விவகாரத்துறை அறிவித்தது.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழகத்தில் உள்ள மின் கட்டண வசூல் மையங்கள் இன்று இரவு வரை செயல்படும். இன்று வரை, 500 ரூபாய், 1,000 ரூபாய் மூலம் மின் கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
புதிய பொறுப்பாளர்கள் நியமித்து அதிரடி.. தமிழ்நாடு அரசியலில் பாஜக அதிரடி மூவ்!