
பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து புதிய வடிவிலான 5௦௦ மற்றும் 2௦௦௦ ரூபாய் நோட்டுகள் நேற்று வங்கியில் விநியோகம் செய்யப்பட்டது.
முன்னதாக இந்த புதிய ரூபாய் நோட்டுகளில் ஜி.பி.எஸ்.நானோ சிப் பொருத்தப்பட்டுள்ளது என்றும், பணத்தை பூமிக்கு அடியில் 120 மீட்டர் ஆழத்தில் புதைத்தாலும் அந்த ஜிபிஎஸ் சிப் கருவிகள் சிக்னல்கள் மூலம் காட்டி கொடுத்துவிடும். எனவே பணம் கருப்பு பணத்தை பதுக்க முடியாது என வதந்திகள் பரவின.
இதையடுத்து நேற்று புதிய 2௦௦௦ ரூபாய் தாளை வாங்கிய ஒருவர் ஆர்வத்தில் அதில் ஜி.பி.எஸ்.சிப் உள்ளதா என்பதை கண்டறிய ரூபாய் நோட்டை கிழித்து பார்த்துள்ளார்.
பின்னர் அவர் கிழித்த அந்த புதிய 2000 ரூபாய் நோட்டை வலைதளத்தில் ஏற்றியதுடன்,
புதிய 2000 நோட்டை வாங்கி பார்த்தேன், இதில் ஜி.பி.எஸ்.சிப் இல்லை என்றும், மணிப்பூர் லாட்டரி சீட்டு மாதிரி இருந்தது, எனவே வாங்கி உடனே கிழித்துவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.