
கடந்த 8ம் தேதி நள்ளிரவு முதல் 5௦௦, 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கருப்பு பணம் மற்றும் கள்ளப்பனத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும், பொது மக்கள் தங்கள் வைத்திருக்கும் பழைய 5௦௦, 1௦௦௦ ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், வருமானத்திற்கு அதிகமாக வங்கியில் பணம் டெபாசிட் செய்பவர்கள் மீது 2௦௦% அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் 5௦௦, 1௦௦௦ ரூபாய் நோட்டுகளை மூட்டை மூட்டையாக எரிப்பது, குப்பைதொட்டிகளிலும், தெருக்களிலும் போட்டு செல்வது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ள சுடுகாட்டு பகுதியில் சுமார் 60லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500, 1000 ரூபாய் கட்டு கட்டாக சிதறி கிடந்துள்ளது.
இதனை கண்ட பொதுமக்கள், அந்த பணத்தை எடுப்பதற்காக ஒன்று திரண்டதால் அவர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பணத்தை எடுக்கும் சண்டையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் ஒருவருக்கு மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.