முதல்வர் ஜெ. நலம் பெற வேண்டுதல் - பால்குட ஊர்வல நெரிசலில் சிக்கி மூதாட்டி பலி: 16 பெண்கள் படுகாயம்

Asianet News Tamil  
Published : Oct 26, 2016, 01:20 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
முதல்வர் ஜெ. நலம் பெற வேண்டுதல் - பால்குட ஊர்வல நெரிசலில் சிக்கி மூதாட்டி பலி: 16 பெண்கள் படுகாயம்

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா குணமாக வேண்டி திருவண்ணாமலையில் நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி ஒருவர் பலியானார். மேலும் 16 பெண்கள் படுகாயமடைந்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரேட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலோ, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் தீவிர தீவிர சிகிச்சை  அளித்து வருகின்றனர். இதையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போது உடல்நலம் தேறி வருவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என  லட்சக்கணக்கானோர் அனைத்து கோயில்களிலும் பூஜை, பரிகாரங்கள், யாகங்கள், பால்குடம், அலகு குத்துவது, தேர் இழுப்பது உள்பட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் 5,001 பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற் றது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆதரவாளர்கள் செய்தனர்.

அதன்படி, திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து லாரி, மினி லாரி, டெம்போ போன்ற சரக்கு வாகனங்கள் மூலம் ஏராளமான பெண்கள் அழைத்து வரப்பட்டனர்.

இதில்,திருவண்ணாமலை வ.உ.சி. 4வது தெருவை சேர்ந்தவர் சம்மந்தம் என்பவரது மனைவி கமலாம்பாள்(60) மற்றும் அமிர்தம்(55), ஆண்டாள்(45) உள்பட ஏராளமானே பெண்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை பச்சையம்மன் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்படத் தயாரானது. கோயில் உள்ளே பெண்களுக்கு பால்குடம் வழங்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல பெண்கள் மயங்கி விழுந்து மிதிபட்டனர்.

இந்த நெரிசலில் திருவண்ணாமலை கமலாம்பாள்(60) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அமிர்தம்(55), ஆண்டாள்(45) உள்பட 16 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

இதை பார்த்ததும் போலீசார், அவர்களை மீட்டு, திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு படுகாயமடைந்த அமிர்தம்(55), ஆண்டாள்(45) உள்ளிட்ட 16 பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தகவலறிந்து திருவண்ணாமலை எஸ்பி பொன்னி, ஆர்டிஓ உமா மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பால் குட ஊர்வலத்தில் 5000க்கு மேற்பட்ட பெண்கள் வருவார்கள் என தெரிந்தும், உரியக பாதுகாப்பு நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ளாததால் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஊர்வலத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கூறுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பொங்கல் பண்டிகை அதுவுமா! மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
சொந்த கட்சியிலிருந்து அடித்து விரட்டப்பட்ட அன்புமணி! இனியாவது உண்மையை ஆராய்ந்து அறிக்கை விடுங்க! சும்மா இறங்கி அடிக்கும் MRK