
தீபாவளி போனஸ் குறித்த பேச்சுவார்த்தைக்கு டோல்கேட் நிர்வாகம் மறுத்ததால் ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துரை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை டோல்கேட் ஊழியர்கள் தீபாவளி போனஸ் கேட்டுள்ளனர்.
மத்திய அரசு நிர்ணயித்துள்ளபடி 72 வேலை நாட்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கோரியும், சுங்கச்சாவடி மைய நிர்வாகத்துக்கு பல முறை மனு கொடுத்துள்ளதாக ஊழியர்கள் கூறினார். ஆனால், சுங்கச்சாவடி மைய நிர்வாகம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தாலம் காலம் தாழ்த்தி வருவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனைக் கண்டிக்கும் வகையில் சுங்கத்துறை ஊழியர்கள் நேற்று காலை முதல் சுங்கச்சாவடியில் வசூலித்த தொகையை நிர்வாகத்திடம் வழங்காமல் நிறுத்தி வைத்ததோடு, சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்களிடம் கட்டணங்களை வசூலிக்காமல் தடுப்புகளை திறந்து விட்டனர்.
இது குறித்து ஏ.ஐ.டி.யு.சி சங்க செயலாளர் விஜயகுமார் கூறும்போது, சுங்கச்சாவடி நிர்வாகம் முறையாக அறிவிப்பு வழங்காமல் நிறுத்தி வைத்ததோடு, சுங்கச்சாவடி அலுவலகம் உள்ளேயே தங்கி சமைத்து சாப்பிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் கூறினார்.