சென்னையில் கட்டுக் கட்டாய் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் …வசமாய் சிக்கிக் கொண்ட பாஜக பிரமுகர்…

 
Published : May 18, 2017, 08:07 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
சென்னையில் கட்டுக் கட்டாய் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் …வசமாய் சிக்கிக் கொண்ட பாஜக பிரமுகர்…

சுருக்கம்

old 500 and 1000 rupees notes seized

 

சென்னை கோம்பாக்கத்தில் போலீசாருக்கான உடைகள் விற்பனை செய்யும் கடையில் 40  கோடிக்கு கட்டுக்கட்டாக பழைய 500 மற்றும் 1000 இந்த கடை ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தியாவில் பழைய 500, 1000 நோட்டுக்கள் மொத்தம் 14 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புழக்கத்தில் இருந்தன. இந்நிலையில், இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், அவற்றை டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றியும், வங்கிகளில் டெபாசிட்டும் செய்தனர்.

அதே நேரத்தில் டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது சட்ட விரோதம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள போலீஸ் சீருடை விற்பனை செய்யும் கடை ஒன்றில் இருந்தது இன்று அதிகாலை 40 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த கடையின் உரிமையாள்ர் பாஜக வைச் சேர்ந்த தண்டபாணி என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் நடத்தி விசாரணையில் நகை கடை ஒன்றுக்காக பழைய ரோட்டுக்களை மாற்றித்தர வைத்திருந்ததாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்ரப ஏற்படுத்தியுள்ளது.

 

 

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!