அதிகாரியை மிரட்டிய துரைமுருகனின் உதவியாளர்! மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை பரபரப்புத் தகவல்

By SG Balan  |  First Published Nov 27, 2023, 8:50 PM IST

அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி நீர்வளத்துறை அதிகாரி ஒருவரை விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என்று வற்புறுத்தினார் என்று அமலாக்கத்துறை கூறுகிறது.


மணல் கொள்ளை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி வற்புறுத்தினார் என நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக அமலாக்கத்துறை இயக்குநரகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகமாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை நடைபெறுகிறது என்றும் இதன் மூலம் கிடைத்த தொகையைக் கொண்டு சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

Tap to resize

Latest Videos

இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் அமலாக்கத்துறை சார்பில் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர் திலகம் மற்றும் 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆகியோர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

சக மாணவரை 108 முறை காம்பஸால் குத்திக் கிழித்த 4ஆம் வகுப்பு மாணவர்கள்!

சம்மன் பெற்றதை அடுத்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

மாவட்ட ஆட்சியர்கள் பத்து பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுத்துறை, நீர்வளத்துறை செயலர்கள், திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர் மாவட்ட கலெக்டர்கள் சார்பாக இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் திங்கட்கிழமை அமலாக்கத்துறை சார்பில் மனு  தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி நீர்வளத்துறை அதிகாரி ஒருவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என்று வற்புறுத்தினார் என்றும் இதுகுறித்து அந்த நீர்வளத்துறை அதிகாரியே வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த வழக்கில் சென்ற செப்டம்பர் 12ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகள், மணல் சேமிப்புக் கடங்குகள், குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்பட 30 க்கும் மேற்பட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்தச் சோதனையின்போது மணல் குவாரிகளின் முகவரான புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம் மற்றும் ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள நகைகள் கைப்பற்றப்பட்டன.

சென்னையில் 93,000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி! தினமும் 910 தடுப்பூசி போட 7 மருத்துவக் குழுக்கள்!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!