தமிழ்நாட்டில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார். ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் இருவரையும் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ் அவர்களுக்கு பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார். நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கி அசத்தி இருக்கிறார்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நேற்று (ஜூலை 12) நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் பாலிவுட், டோலிவுட், திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அம்பானி வீட்டு கல்யாணத்தில் பங்கேற்று வாழ்த்தியுள்ளனர். இதனால் அம்பானியின் திருமணம் நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. திருமணத்துக்காக அம்பானி குடும்பத்தினர் செய்திருக்கும் தடபுடலான ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் வியப்பை ஏற்படுத்துகின்றன.
100 மில்லியனைத் தாண்டிய ஃபாலோர்ஸ் எண்ணிக்கை! உலகின் நம்பர் ஒன் தலைவரான மோடி!
மும்பையில் இன்று நடைபெற்ற பிரபல தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநருமான திரு. முகேஷ் திருபாய் அம்பானி அவர்களின் மகன் திரு. ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி, முகேஷ் அம்பானி அவர்களுக்கு நினைவு பரிசு… pic.twitter.com/OoMHLdtSiJ
— O Panneerselvam (@OfficeOfOPS)இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார். ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் இருவரையும் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ் அவர்களுக்கு பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஓ.பி.எஸ்., "மும்பையில் இன்று நடைபெற்ற பிரபல தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநருமான திரு. முகேஷ் திருபாய் அம்பானி அவர்களின் மகன் திரு. ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி, முகேஷ் அம்பானி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய போது..." என்று கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முகேஷ் அம்பானியிடம் அவரது தந்தை திருபாய் அம்பானியின் படத்தைப் பரிசையாக அளித்தபோது எடுத்த படத்தை ஓபிஎஸ் பகிர்ந்திருக்கிறார். ஓ.பன்னீர் செல்வத்தின் இளய மகன் ஜெயபிரதீப்பும் அவருடன் இருப்பதைப் படத்தில் காணமுடிகிறது. திருபாய் அம்பானியின் படத்தைப் பரிசாகத் தந்திருப்பதைப் பார்த்ததும் முகேஷ் அம்பானியும், ஆனந்த் அம்பானியும் உற்சாகம் அடைந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
டப்பா காரை கொடுத்து ஏமாற்றிய BMW! ரூ.50 லட்சம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!