சென்னையில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை..மீண்டும் அதிர்ச்சி சம்பவம்

Published : Jul 31, 2022, 12:08 AM IST
சென்னையில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை..மீண்டும் அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

சென்னையில் நர்சிங் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, திருவேற்காடு அருகே விடுதியுடன் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில்  ஈரோட்டை சேர்ந்த மாணவி 2ம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார். விடுதியில் தங்கி படித்து வருகிறார் இவர். இன்று மதியம் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு சென்று இருக்கிறார். தனது தோழிகளிடம் சிறிது நேரம் கழித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.  ஆனால் அவர் வரவில்லை. நீண்ட நேரமாகியும் வராததால் அவர்கள் சென்று பார்த்து இருக்கின்றனர். 

மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !

கதவு திறக்கப்படாததால், கதவினை உடைத்து சென்று பார்த்த போது அந்த மாணவி தூக்கு போட்டு இறந்துள்ளார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன மாணவியின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.  அவரது பெற்றோர் மற்றும் பலர் மனவி  இறந்ததை கண்டித்து சாலை மறியல் ஈடுபட முயன்றனர். 

மேலும் செய்திகளுக்கு..உண்மையான அதிமுக எடப்பாடி தான்.. மகிழ்ச்சியில் இருந்த இபிஎஸ் தரப்புக்கு 'ஓபிஎஸ்' கொடுத்த ட்விஸ்ட் !

அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள்.இந்த தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரமா? அல்லது மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? சக மாணவிகளுடன் தகராறு ஏற்பட்டதா? அல்லது கல்லூரி நிர்வாகத்தில் ஏதாவது தகராறு ஏற்பட்டதா? என பல்வேறு கோணத்தில் திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி