தீபாவளிக்கு முதல் நாள் அரசு விடுமுறை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

By Selvanayagam PFirst Published Oct 29, 2018, 8:49 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 6 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு முதல் நாளான நவம்பர் 5 ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பொது மக்கள் அந்தப் பண்டிகையை அவரவர் சொந்த ஊர்களில் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பப்படவுள்ளன.

இந்நிலையில் 6 ஆம் தேதி ஒரு நாள் மட்டுமே தீபாவளிக்காக இந்த விடுமறை விடப்பட்டிருந்தது.  அதனால் தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிக்கைக்காக தங்களது சொந்த ஊருக்கு சென்று மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. 

நவம்பர் 5-ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. நவம்பர் 5-ம் தேதிக்கு பதிலாக நவ.10-ம் தேதி பணி நாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

click me!