மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பில் சிக்கி ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சேதமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கட்டணமில்லாமல் ஆவணங்களை மீண்டும் வழங்கும் வகையில் நாளை 46 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்பில ஆவணங்கள் சேதம்
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வரலாறு காணாத மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. வீடுகளுக்குள் இருந்த முக்கிய பொருட்கள் வீணாகின. மேலும் ஆதார், பள்ளி சான்றிதழ், ரேசன் கார்டு உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக கட்டணமில்லா சேவை மூலமாக ஆவணங்களை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னை மாவட்டத்தில், மிக்ஜாம் புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை ,பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் பெறும் வகையில்,
46 இடங்களில் சிறப்பு முகாம்
அதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் (1 முதல் 15 வரை) உள்ள 46 பகுதி அலுவலகங்களில் 12-12-2023 (செவ்வாய்க் கிழமை) அன்று முதல் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 46 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்