தமிழகத்தை ஏமாற்றிய ஃபானி புயல் !! லேசான மழை மட்டும்தான் இருக்குமாம் !!

By Selvanayagam PFirst Published Apr 28, 2019, 8:30 AM IST
Highlights

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஃபானி புயலாக மாறியுள்ள நிலையில் அது இன்று தீரி புயலாக உரு மாறுகிறது. ஆனால் புயல் தமிழகத்தில் இருந்து 300 கிரோ மீட்டர் வரை வருவதற்கான சாத்தியக் கூறிகள் மட்டுமே இருப்பதால், கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் லேசான மழை மட்டுமே பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டி உள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் கடந்த 25-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கொஞ்சம், கொஞ்சமாக தீவிரமடைந்து தற்போது ‘பானி’ புயலாக உருவெடுத்து இருக்கிறது. இந்த புயல் தீவிர புயலாக இன்று உருமாறுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்,தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காலை வலுப்பெற்று வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. இது பிற்பகலில் புயலாக மாறியுள்ளது.

‘பானி’ என பெயரிடப்பட்ட இந்த புயல், வட தமிழக கடற்கரை பகுதிகளில் இருந்து சுமார் 1,250 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு உள்ளது. இது அடுத்த வரும் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற கூடும். இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 30-ந் தேதி மாலை, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகள் அருகே வரக்கூடும் என தெரிவித்துள்ளார்..


தற்போதைய நிலவரப்படி இந்த புயல் வட தமிழக கடற்கரையில் இருந்து 200 கி.மீ. முதல் 300 கி.மீ. தூரம் வரை வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இந்த புயல் தமிழக பகுதிகளில் கரையை கடப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு தான் என்று குறிப்பிட்டார்..

தொடர்ந்து பேசிய அவர், ஃபானி புயலின் முந்தைய கணிப்புகளின்படி தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நிலை இல்லை. ஒருவேளை புயல் திசை மாறி செல்லும் பட்சத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு என்று தெரிவித்தார்..

click me!