அசெம்ளி முடியும் வரை போலீஸ்காரர்களுக்கு லீவு கிடையாது… ஸ்ரிக்ட் ஆர்டர் போட்ட சென்னை கமிஷனர்…

Asianet News Tamil  
Published : Jun 15, 2017, 08:09 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
அசெம்ளி முடியும் வரை போலீஸ்காரர்களுக்கு லீவு கிடையாது… ஸ்ரிக்ட் ஆர்டர் போட்ட சென்னை கமிஷனர்…

சுருக்கம்

No holiday or leave for policemen in chennai

நேற்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த கூட்டத் தொடர் முடியும் வரை லீவி எடுக்கக் கூடாது என காவலர்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை கமிஷனர் வெளியிட்டுள்ள உத்தரவில்,  தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர், நேற்று தொடங்கிய நிலையில், வரும் ஜூலை, 19 வரை, விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்களை, இரவு நேரங்களில் போலீஸ் ஸ்டேஷனில் தங்க வைக்கவும், போலீசார், அதிகாரிகள் விடுமுறை எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்போது லாக்கப் டெத், உள்ளிட்டவற்றை  தவிர்க்கும் வகையில், விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபர்களை, மாலை, 6:00 மணிக்கு மேல், போலீஸ் ஸ்டேஷன்களில் வைக்கக் கூடாது என தெரிவிக்கக்கட்டுள்ளது.. 

போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் ஆகிய சம்பவங்கள் நடக்கும் நிலையில், போலீசார், அதிகாரிகள் எக்காரணம் கொண்டும், லத்தி சார்ஜ், கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துதல், துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்களை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

PREV
click me!

Recommended Stories

ED, சிபிஐ, அமித்ஷா மிரட்டலால் உருவான NDA கூட்டணி.. விளாசித் தள்ளிய ஸ்டாலின்.. பிரதமர் மீதும் விமர்சனம்!
பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவான கேடு கெட்ட கட்சி பாஜக.. வெட்கமே இல்லையா? பிரதமர் மோடியை விளாசிய உதயநிதி!