டிசம்பர் மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் வரும். அதில் திமுக வெற்றி பெறும் – பொன்முடி கணிப்பு…

 
Published : Jun 15, 2017, 07:58 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
டிசம்பர் மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் வரும். அதில் திமுக வெற்றி பெறும் – பொன்முடி கணிப்பு…

சுருக்கம்

Assembly elections will come before December and DMK wins - Ponmudi

விழுப்புரம்

தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் வரும். அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று பொன்முடி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

திமுக கட்சியின் தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தாநாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் நடைப்பெற்றது.

இந்தப் பொதுக்கூட்டம் விழுப்புரம் மத்திய மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழக திமுக சார்பில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மத்திய மாவட்டச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன், ஒன்றியத் தலைவர் கந்தசாமி, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர பொருளாளர் சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றியச் செயலாளர் விசுவநாதன் வரவேற்றார். மாநில இலக்கிய அணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான தென்னவன், தலைமை கழக பேச்சாளர் கோபி ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

இந்தக் கூட்டத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. பேசியது:

“தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் விலைபேசி விற்கப்படுகின்றனர்.

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மக்களின் குறைகளை நிறைவேற்ற தொகுதி பக்கம் வருவதில்லை.

மக்களுக்காக எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரே தலைவர் கருணாநிதி ஒருவர்தான்.

வருகிற டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும். அந்த தேர்தலில் திமுக வெற்றி பெறும். ஆட்சியை பிடிக்கும்” என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் சடகோபன், மோகன்ராஜ், மாதவன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிர்மல்ராஜ், ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, முன்னாள் கவுன்சிலர்கள் ராஜ்மோகன், விஜயபாபு, விஜய்கிருஷ்ணராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் இறுதியில் நகரச் செயலாளர் பூக்கடைகணேசன் நன்றித் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!