தமிழ்நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா தற்போது வரை கண்டறியப்படவில்லை என்றும், எத்தகைய பாதிப்பையும் எதிர்கொண்டு மக்களை காப்பாற்ற அரசு தயாராக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நோய் குறித்து முதல்வருக்கு எடுத்துக் கூறினர்.
தமிழகத்தில் தற்போது உள்ள கொரோனா தொற்று எக்ஸ்பிபி வகையாகும். இது பிஏ-2 உருமாறிய கொரோனாவின் உள் வகையாகும். சில ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று பிஏ-5ன் உள் வகையாகும். இத்தகையா பிஏ5 தொற்று தமிழ்நாட்டில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாக கண்டறியப்பட்ட இந்த தொற்று வகை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலையில் பள்ளி மாணவிக்கு முகத்தில் கூடு வைத்த தலைமை ஆசிரியர்
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பரிசோதனை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்டவை போதுமான அளவில் இருப்பதாகவும், தேவைப்படும் பட்சத்தில் இந்த வசதிகள் கூடுதலாக்கப்படும் என தெரிவித்தார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
கொரோனா மேலாண்மைக்கான நிலையான வழிகாட்டுதல்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் உள் அரங்குகளில், நோய்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி மருத்துவரின் ஆலோசனைப்படி கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறவும் அறிவுறுத்தினார். இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளர். மேலும் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.