தமிழ் மீது அதிகம் பற்று கொண்ட தமிழகத்தில் மருத்துவ படிப்புகள் தமிழில் இருந்தால் தான் அதனை முழுமையாக புரிந்துகொண்டு மேற்கொண்டு ஆராய்ச்சிகள் செய்ய முடியும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது இந்த விழாவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக மருத்துவத்துறை அமைச்சர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்
தமிழக சுகாதாரத்துறை ICUவில் உள்ளது - விஜயபாஸ்கர் விமர்சனம்
இதனைத் தொடர்ந்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், தமிழ் மீது அதிகம் பற்று கொண்டுள்ள, தமிழ் மீது ஆர்வமுள்ள தமிழகத்தில் மருத்துவ படிப்புகள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும். மருத்துவ படிப்புகள் தமிழில் இருந்தால் தான் மாணவர்கள் அதனை எளிதாகவும், ஆழமாகவும் உள்வாங்கிக் கொண்டு மேல் படிப்புகளைத் தொடர முடியும். மேற்கொண்டு ஆராய்ச்சி செய்யவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
ஜேஇஇ தேர்வு; தமிழக மாணவர்களுக்கு சிறப்பு சலுகை ழங்கிய தேர்வு முகமை
அதற்காக நான் ஆங்கிலத்தில் படிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. தாய் மொழியில் உறுதியாக இருந்தால் மேற்கொண்டு எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். கொரோனா உச்சமாக இருந்த காலகட்டத்தில் சில தனியார் மருத்துவமனைகள் அதிகமாக பணம் வசூலித்தது மன வேதனையை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.